முத்தமிழ் சுவைகள்:
இவ்வுண்மையைத் "தமிழ் தழுவிய சாயல்" என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை" எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்"ழை உடையது "தமிழ்" எனப் பொருள் கூறுவதும் உண்டு.
தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்" வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது.
த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.
தமிழுக்கு "முத்தமிழ்" எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும்.
👇👇👇👇👇👇👇
0 Comments