பள்ளி சார்ந்த தகவல்களை கணினியில் பதிவு செய்யும் பணிச் சுமையிலிருந்து விரைவில் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

பள்ளி சார்ந்த தகவல்களை கணினியில் பதிவு செய்யும் பணிச் சுமையிலிருந்து விரைவில் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்..
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
மேலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.


இரண்டு வருடமாக ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. அதில் ஐந்து கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். 

குறிப்பாக EMIS என்னும் கணினியில் விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருந்து விரைவில் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டு,  அதற்குப் பிறகு வருகை பதிவேடு மட்டும் பராமரித்தால் போதும் என்ற நிலை உருவாகும் நிதி நிலையின் அடிப்படையில் படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாடு கல்வியில் முதல் இடத்தில் கொண்டு வர கல்வித்துறையில் உள்ள ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் அருகில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கலாநிதி வீராச்சாமி எம்பி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu