சென்னை ,ஆக 31:அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் செயற்கைக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 7 அரசு கல்வியல் கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் 900, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1,140 என 2, பி.எட் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
2023-2024-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. மாணவர்கள்
www.tngasa.in என்ற இணையதளத்தில் செப். 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ. 500, எஸ். சி., எஸ். டி. பிரிவினருக்கு ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணத்தை இணையவளையில் செலுத்தலாம். இணையதள வசதி இல்லாத மாணவர்கள், இயக்குநர், கல்லூரி இயக்ககம், சென்னை- 15 என்ற முகவரிக்கு செப். 1 அல்லது அதன் பிறகு வரை வோலை எடுத்து நேரடியாக செலுத்தலாம்.
பாடப்பிரிவுகள் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் ஆகிய விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். விண்ணப்பிப்பது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால், 9363 462070, 93634 62007, 93634 62042அல்லது 93634 62024 என்ற எண்ணுக்கு தொடர்பு கொ ள்ளலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
0 Comments