எட்டாம் வகுப்பு வரைபடம் - சமூக அறிவியல் (TM) - PDF

நிலப்படம் (map) அல்லது வரைபடம் என்பது புவி அல்லது வேறு கோள்களின் மேற்பரப்பில் உள்ள புவியியல், நிலவியல், புவிஅரசியல் போன்றவை தொடர்புள்ள அம்சங்களை, அளவுவிகிதத்துக்கு (scale) அமையப் பதிலிட்டுக் காட்டுவதற்கான ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக இது ஒரு மட்டமான மேற்பரப்பில், வரையப்படுகின்றது.





இதனைக் குறிக்க, தேசப்படம், வரைபடம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. உலகக் கோள மாதிரிகளில், நிலப்படம் ஒரு கோள மேற்பரப்பில் வரையப்படுகின்றது. நிலப்படவரைவியல் (Cartography) என்பது நிலப்படங்களை வரைவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். முக்கியமான நிலப்படவகைகளிலே தரைத்தோற்ற வரைபடங்கள் அடங்குகின்றன. 

இவை புவியின் நில மேற்பரப்பு, கரையோர மற்றும் கடல்சார்ந்த பகுதிகள், கடல் ஆழம் மற்றும் நீர்ச் சுற்றோட்டங்களைக் காட்டும் படங்கள், விமானப் போக்குவரத்து தொடர்பான படங்கள், காலநிலை விபரங்களைக் காட்டும் படங்கள் போன்றவையாக அமைகின்றன. நிலப்படம் ஒரு பரப்பின் காட்சிபூர்வமான அடையாளம் ஆகும். 


இது அந்த பரப்பின் பொருட்கள், பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு பார்வைக்குரிய அடையாள பிரதியாகும்.


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

👇👇👇👇👇👇👇

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu