மகாகவி பாரதியார்
1.மகாகவி பாரதியார் என்று அழைக்கப்படும் சுப்ரமணிய பாரதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
2.இவர் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி, தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
3. இவரது தந்தை சின்னசாமி ஐயர், தாயார் லட்சுமி அம்மாள் ஆவர்.
4.இவருக்கு 11 வயது இருக்கும்போது, இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி, எட்டயபுர மன்னர் இவருக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.
5.“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று கூறிய பாரதியார், தீண்டாமையை அறவே வெறுத்தார்.
6.பாரதியாரின் புகழ்பெற்ற படைப்புகளில் “புதுமை பெண்” மற்றும் “பாரத சமுதாயம்” ஆகியவை அடங்கும்.
7.அவரது இலக்கியப் படைப்புகள் தமிழ் மட்டும் அல்ல; அவர் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளிலும் எழுதினார்.
8.மகாகவி சுப்பிரமணிய பாரதியா ஒரு தமிழ் கவிஞர்,சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடியவர் ஆவார்.
9. கல்வி மற்றும் பெண் உரிமைகளின் முக்கியத்துவத்தை அவர் தனது எழுத்துக்களில் வலியுறுத்தினார்.
10.அவர் செப்டம்பர் 11, 1921 இல் 39 வயதிலேயே காலமானார், ஆனால் அவரது வார்த்தைகள் இந்தியாவில் சுதந்திரம் மற்றும் நீதியைத் தேடும் மக்களுடன் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.
பாரதியாரின் சிறப்பு பெயர்கள்
தேசியக்கவி, மகாகவி, காளிதாசன், சக்திதாசன், ஓர் உத்தம தேசாபிமானி, நித்திய தீரர், ஷெல்லிதாசன், பாட்டுக்கொரு புலவன் பாரதி, நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, முன்னறி புலவன்.
"பாரதி" பட்டம்
7-ஆவது வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவிபாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர்.
பாரதியார் பதினான்கு மொழிகள் கற்றறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால்தான்,“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவாக எடுத்துரைத்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments