சங்க இலக்கிய நூல்களில் - எட்டுத்தொகை நூல்கள்

சங்க இலக்கிய நூல்களில்  -  எட்டுத்தொகை நூல்கள்




கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினை சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பட்டவை சங்கப் பாடல்கள் எனப்படும்.

சங்க இலக்கியங்கள் அக்கால கட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளை படம் பிடித்து காட்டுவதாய் உள்ளன.

பண்டைத் தமிழரது காதல், போர், வீரம் ஆட்சி அமைப்பு வணிகம் போன்ற நடப்புகளை சங்க இலக்கியப் பாடல்கள் அறியத் தருகின்றன.

பதினெண் மேற்கணக்கு  நூல்கள் இருவகைப்படும். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஆகும்.
எட்டுத்தொகை நூல்கள்:

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒரு சேர தொகுக்கப்பட்டது.
எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் மற்றும் இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக உள்ளது.

சிறப்புகள்:

எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது புறநானூறு.

எட்டுத்தொகை நூல்களில் காலத்தால் பிந்தியது பரிபாடல், கலித்தொகை. 

எட்டுத்தொகை நூல்கள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை.

எட்டுத்தொகை நூல்களில் நாடகப் பாங்கில் அமைந்த நூல் புறநானூறு.

எட்டுத்தொகை நூல்களில் தொகையால் பெயர் பெற்ற நூல்கள் கலித்தொகை, பரிபாடல்.



எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று 
இத்திறத்த எட்டுத்தொகை.













Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu