மாணவர்களிடையே குறைபாடு இருந்தால் கண்டறிய 'நலம் நாடி' செயலி

மாணவர்களிடையே குறைபாடு இருந்தால் கண்டறிய 'நலம் நாடி' செயலி

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இயக்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியினை எவ்வித தடையும் இன்றி பெற வேண்டும் என்ற அக்கறையில் தமிழ்நாடு அரசு பல முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

 மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை கண்டறியவே '4நலம் நாடி' என்னும் செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்றுநர்கள் இச்செயலியை பயன்படுத்தி குறைபாடுகளை எளிதில் கண்டறிவார்கள்.

மாணவர்களுக்கு பிறக்கும் போது ஏற்பட்டுள்ள குறைபாடுகள் வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் பிற குறைபாடுகள் ஆரம்ப நிலையிலே கண்டறியப்படுகின்றன.

 பள்ளிகளில் ஆசிரியர்களால் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு பின்னர் சிறப்பு பயிற்றுநர்களால் இந்த செயலியை பயன்படுத்தி 21 வகையான குறைபாடுகளுக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ள இயலும்.

இதன் வாயிலாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் பிற சலுகைகள் அனைத்தும் உரிய தருணத்தில் கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇




Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu