கற்றல் விளைவுகள் (learning outcomes) பருவம் : 3 - வகுப்பு : 1 முதல் 7 வரை

கற்றல் விளைவுகள் (learning outcomes)

பருவம் : 3

வகுப்பு : 1 முதல் 7 வரை

வகுப்பு , மாதம் , பாடம் , பாட தலைப்பு , கற்றல் விளைவு எண் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.




கற்றல் விளைவுகள் என்பது ஒவ்வொரு நிலையிலும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்களை பாடவாரியாக மட்டும் வகுப்பு வாரியாக குறிப்பிடாமல் தொடக்கநிலை மற்றும் உயர் தொடக்க நிலைகளில், குறிப்பிட்ட அந்த வகுப்புக்கு ஏற்ப அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் பெறவேண்டிய முக்கியமான பொதுத் திறன்களை தொகுத்து கூறுவதாகும்.

குழந்தைகளின் மொழிப்பாடம் வாசிக்கும் திறன் எண் அறிவு கணித திறன் பொது அறிவு மற்றும் வாழ்வியல் திறன் போன்றவற்றில் அவர்களின் வெளிப்பாடுகள் குறைந்து வருவது தற்போது மிகவும் கவலை அளிப்பதால் கற்றல் விளைவுகள் அனைவரையும் அடையச் செய்தல் மிகவும் இன்றி அமையாதது.

கற்றல் விளைவுகள் வகுப்பு வாரியாக வகுப்பறை செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை தர மதிப்பீடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.

கலை திட்ட எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் கற்றல் விளைவுகளை ஆசிரியர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி கற்றல் செயல்பாடுகளை திட்டமிட்டு அனைத்து கற்போரின் கற்றல் தேவைக்கேற்ப உள்ளடங்கிய வகுப்பில், பல்வேறு வகையான கற்றல் சூழ்நிலைகள்/வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

வகுப்பு வாரியாக தனித்தனியாக பார்க்காமல் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை இலக்காகக் கொண்டு முழுமையான கண்ணோட்டத்துடன் இதனை காண வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் சம அளவிலான திறன்களை பெற வேண்டும் என்ற நோக்கில்"கற்றல் விளைவுகள்"தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தரப்பட்டுள்ளன.

ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையில் அனைத்து பாடங்களுக்கும் மாணவர் வெளிப்படுத்த வேண்டிய கற்றல் திறன்கள் கற்றல் விளைவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இதை புரிந்து கொண்டு ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் அனைவரும் இக்கற்றல் விளைவுகளை அடைய தமது பங்களிப்பை வழங்குதல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu