TAMIL - CLASS -1,2 - TERM - 3 - READING PRACTICE

பழமையான மொழி, பண்பட்ட மொழி, நம் பைந்தமிழ் மொழி, தேனினும் இனியது நம் தீந்தமிழ் மொழி தமிழ் என்றால் எளிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் அமிழ்தம்.



“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி.” தமிழானது உலகில் காலம் பிறக்கும் முன் பிறந்தது. எக்காலத்திலும் நிலையாய் இருப்பது.காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழாய் வளந்து. கன்னி தமிழாய், செந்தமிழாய், வண்டமிழாய், பைந்தமிழாய், வளம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும். எண்ணற்ற புலவர்களாலும் ,அரசர்களாலும் சங்கம் வைத்து தடத்த பட்ட ஒரே மொழி  தமிழ் மொழியாகும்.

மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் சிறப்புக்களை போற்றிப் பாடியுள்ள புலவர்களுள் பாரதியார், பாவேந்தர், மற்றும் திருவள்ளுவர் ஆகியோர் முக்கியமானவர்களாவார்.

மக்களின் எழிச்சி கவிஞனாக போற்றப்படுகின்ற பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும், “சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா” என்றும் குறிப்பிடுகின்றார்.

தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழியாகிவிட்டது. இதில் நாம் குறைக் கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகளும் கருதுகின்றனர். 

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu