பான் கார்டில் எப்போது பெயர் மாற்றம் செய்ய வேண்டும் தெரியுமா
இதை மட்டும் மறந்துடாதீங்க
இந்தியாவில் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களுக்கு உங்கள் பான் கார்டில் துல்லியமான தகவல்களை வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்கள் பான் கார்டில் உள்ள பிழைகள் சில சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.
எனவே உங்கள் விவரங்கள் சரியானதாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
உங்கள் பெயரை சட்டப்பூர்வமாக மாற்றியிருந்தாலும், பான் கார்டில் பெயர் தவறாக எழுதப்பட்டிருந்தாலும் அல்லது உங்கள் முகவரியைப் புதுப்பிக்க வேண்டியிருந்தாலும், உங்கள் பான் கார்டு விவரங்களை உடனே அப்டேட் செய்ய வேண்டும்.
திருத்தங்களைச் செய்வதற்கான சரியான காரணங்கள், தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து, உங்கள் பான் கார்டு தகவலை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் புதுப்பிக்கலாம்.
உங்கள் பான் கார்டு விவரங்களை எந்தெந்த சூழ்நிலைகளில் அப்டேட் செய்ய வேண்டும்?:
சட்டப்பூர்வ பெயர் மாற்றம்: ஒருவேளை திருமணம் அல்லது தனிப்பட்ட விருப்பம் காரணமாக உங்கள் பெயரை சட்டப்பூர்வமாக மாற்றியிருந்தால், இந்த மாற்றத்தை உங்கள் பான் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
உங்கள் பான் கார்டில் உள்ள உங்கள் பெயரில் பிழைகள் இருப்பது, உங்களின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் முரண்பாடுகளை ஏற்படுத்தலாம்.
எனவே இதுபோன்ற விவரங்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். திருமணத்திற்குப் பிறகு குடும்பப்பெயரில் மாற்றம்:
பல நபர்கள் திருமணத்திற்குப் பிறகு புதிய குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இதுபோன்ற நேரங்களிலும் பான் கார்டில் மாற்றம் செய்ய வேண்டும்.
முகவரி மாற்றம்: நீங்கள் ஒரு புதிய வீட்டுக்கு மாறியிருந்தால்,
வரி அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடிதங்களைப் பெறுவதற்கு உங்கள் பான் கார்டில் உங்கள் முகவரியைப் புதுப்பிப்பது அவசியம்.
பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?: உங்கள் பெயர், பெற்றோரின் பெயர் அல்லது பிறந்த தேதியில் உள்ள தவறுகளை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அப்டேட் செய்யலாம்.
*ஆன்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி*
ஸ்டெப் 1: அதற்கு முதலில் NSDL அல்லது UTIITSL இணையதளத்தைப் பார்வையிடவும்.
இவை இந்தியாவில் பான் கார்டு சேவைகளுக்கான 2 அதிகாரப்பூர்வ அரசாங்க இணையத்தளங்களாகும்.
ஸ்டெப் 2: "Changes or Correction in PAN Data" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான படிவத்தை நிரப்பவும்.
ஸ்டெப் 3: அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் அப்லோட் செய்யவும்.
ஸ்டெப் 4: இந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். எனவே கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஸ்டெப் 5: படிவத்தை பூர்த்தி செய்து ஆவணங்களை அப்லோட் செய்த பிறகு, படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.
சில சந்தர்ப்பங்களில், உங்கள் ஆவணங்களின் ஜெராக்ஸ் காபியை செயலாக்க மையத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும்.
தேவைப்பட்டால் இந்த செயல்முறையையும் சேர்த்து முடிக்கவும்.
ஆஃப்லைனில் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: பான் கார்டு அலுவலகத்திற்குச் செல்லவும் அல்லது NSDL அல்லது UTIITSL இணையதளத்தில் இருந்து படிவம் 49A-ஐ டவுன்லோட் செய்யவும்.
ஸ்டெப் 2: சரியான விவரங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
ஸ்டெப் 3: அடையாளச் சான்று, முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான ஆவணங்களின் ஜெராக்ஸ் காபியை இணைக்கவும்.
ஸ்டெப் 4: பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை அருகிலுள்ள பான் கார்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 5: அதன் பின் உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்துவதற்கு கட்டணத்தைச் செலுத்துங்கள்.
ஸ்டெப் 6: சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பான் கார்டு விவரங்கள் அப்டேட் செய்யப்படும்.
*உங்கள் பான் கார்டு விவரங்களைப் அப்டேட் செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள்*
1.பான் கார்டின் ஜெராக்ஸ்:
உங்களின் தற்போதைய பான் கார்டின் ஜெராக்ஸ் காபி. அடையாளச் சான்று:
2.ஆதார் அட்டை,
3.வாக்காளர் அடையாள அட்டை,
4.ஓட்டுநர் உரிமம் அல்லது ரேஷன் அட்டை போன்றவை. முகவரி ஆதாரம்: ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, சொத்து வரி ரசீதுகள் அல்லது பயன்பாட்டு பில்கள் போன்றவை.
5.பிறந்த தேதிக்கான சான்று: ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பிறப்புச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்.
0 Comments