ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

வட்டார வள மைய பயிற்றுனர்கள் ஆசிரியராக தகுதி தேர்வு தேர்ச்சி அவசியம்..



சென்னை: பட்டதாரி ஆசிரியர்களாக, 2011 ஜூலை 29க்கு பின் நியமிக்கப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



அரசாணை

உயர் நீதிமன்றத்தில், சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த மனு:

*'சர்வ சிக் ஷ அபியான் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களை, அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம். இதற்கான அரசாணை, 2002 பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டம், 2010 ஆகஸ்டில் அமலுக்கு வந்த பின், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவோ, பதவி உயர்வு அல்லது இடமாற்றம் வாயிலாக வருபவர்களாகவோ இருந்தால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. அதன்படி, தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், 2002 முதல் 2010 வரையிலான காலக் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள். 2010 ஆகஸ்ட் 23க்கு முன், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு விட்டதால், தகுதித் தேர்வு பொருந்தாது' என்று, கூறப்பட்டுள்ளது.


மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:


முகாந்திரம் இல்லை

வட்டார வள மைய பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றி, 2010 ஆகஸ்ட் 23க்கு முன் நியமிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் நீதிமன்றம் குறுக்கிட முகாந்திரம் இல்லை. 2011 ஜூலை 29க்கு பின் நியமிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை தான் பிரச்னை உள்ளது.


அரசின் இடைக்கால ஏற்பாடு, உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக இருக்க முடியாது.


கடந்த, 2011 ஜூலை 29க்கு பின், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நேரடி தேர்வு அல்லது பதவி உயர்வு அல்லது இடமாற்றம் வாயிலாக நியமிக்கப்பட்டால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


எனவே, பட்டதாரி ஆசிரியர்களாக, 2011 ஜூலை 29 க்கு பின் நியமிக்கப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அதாவது, பட்டதாரி ஆசிரியராக பணியில் இருக்க தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu