அரசாணை 243 ஒரு பார்வை
கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை என இரு பிரிவுகளாக செயல்படுகின்றன. ஏன்?
இரு துறைகளில் சார்நிலைப்பணி விதிகளில் நிறைய அம்சங்கள் மாறுபடுகின்றன. பள்ளிக்கல்வித்துறையில் மாநில அளவிலான முன்னுரிமையின்படி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்ற பெண் ஆசிரியர்களில் 10% தவிர, பெரும்பாலும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்வதில்லை. காரணம், தொலைவு மற்றும் குடும்பச் சூழல்.
இது ஒரு புறம் இருக்கட்டும். மற்றொருபுறம் தொடக்கக் கல்வித் துறையை பொருத்தவரை, அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பதிவு உயர்வு வழங்கப்படும். ஏன் ஒன்றிய அளவிலான பதவி உயர்வு?
தொடக்க நிலையில் பயிலும் மாணவர்கள் 5 வயது முதல் பள்ளிக்கு வருவதால், அந்தந்த வட்டார வழக்கு மொழி பேசும் ஆசிரியர்களால் தான், அந்தந்த பகுதி மாணவர்களுக்கு, பாடங்களை, எளிதில் புரிய வைக்க முடியும் என்பதை அரசு ஆய்ந்து அறிந்து முடிவெடுத்தது.
அதன் பொருட்டு சார்நிலைப் பணி விதிகளின்படி அரசாணை 1383 நாள் 23.05.1988 -வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு unit என்பது ஒரு ஒன்றியம் ஆகும் எனக் கூறுகிறது. அதன்படியே நியமனங்கள் பதவி உயர்வுகள் யாவும் நடைபெற்று வந்தன.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments