அரசுப் பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்

அரசுப் பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்

விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லு நடக்காமல் இருக்க ஆன்லைன் வழி சேர்க்கை முறை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும் 38, 000 அரசு பள்ளிகளும்,8000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் 45 லட்சம் மாணவ மாணவியரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22 லட்சம் பேரும் படிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில் ஆசிரியர்களின் பணியிடங்களை தக்க வைக்க மாணவ மாணவரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்டுவதாக கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை செய்து போலி மாணவர் எண்ணிக்கை பிரச்சனையை தடுக்க மாணவர்களின் ஆதார் எண், ரத்தப் பிரிவு, பெற்றோரின் மொபைல் போன் எண் போன்றவற்றை எமிஸ் ஆன்லைன் தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண மாணவரின் சேர்க்கையை ஆன்லைன் முறையில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇




Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu