தமிழ் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்கள்
அ முதல் ஔ வரை உள்ள 12 எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறோம். உயிர் இன்றி எந்த உயிரும் உயிர் வாழ முடியாது, அதுபோல உயிர் எழுத்துக்கள் இன்றி எந்த எழுத்தையும் உச்சரிக்க முடியாது. பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படையாக இருப்பதால் உயிர் எழுத்து எனப் பெயர் பெற்றது. உயிர் எழுத்துக்களை தனியே ஒலிக்கலாம். உதாரணமாக அ-பசு, ஈ-உயிரினம்.
மெய் எழுத்துக்கள்
க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்கள் மெய் எழுத்துகள் எனப்படும். மெய் எழுத்துக்களை தனியே ஒலிக்க முடியாது. தனியே ஒலித்தால் பொருள் தராது. க் தனியே ஒலித்தால் எந்த பொருளும் தராது. உயிர் இன்றி மெய் இயங்காது.
க் என்ற மெய் எழுத்திற்கு முன்னால் “இ” என்ற உயிரும் பின்னால் “உ” என்ற உயிரும் மென்மையாக சேரும் போது க் என்ற மெய் எழுத்து தோன்றுகிறது.
குறில் எழுத்துக்கள்
ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு குறைவாக இருந்தால் அது குறில் எனப்படும். அ, இ, உ, எ, ஒ போன்ற எழுத்துக்கள் ஒலிக்க குறைந்த கால அளவு அதாவது ஒரு மாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது குறில் எனப்படுகிறது.
நெடில் எழுத்துக்கள்
ஒரு எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகமாக இருந்தால் அது நெடில் எனப்படும். ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க அதிக கால அளவு அதாவது இருமாத்திரை கால அளவு எடுத்துக் கொள்வதால் இது நெடில் எனப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
UYIR EZHUTHUKKAL PDF
👇👇👇👇👇
MEI EZHUTHUKKAL PDF
👇👇👇👇👇
0 Comments